ஆண்களின்_விசேஷ_செயல்பாடுகளுக்கு_வீரிய_விருத்தி_குளிகை
Place: பிருங்கிமலை
ஆண்களின்_விசேஷ_செயல்பாடுகளுக்கு_வீரிய_விருத்தி_குளிகை.
உலகில் மக்களின் உணவு பழக்க வழக்கத்தினால் திருமணத்துக்கு பிறகு இயல்பான கருத்தரிப்பு என்பது வெகுவாக குறைந்துவிட்டது.
தற்போது ஆண்கள் தான்
இந்த குறைபாட்டை அதிகமாக கொண்டிருக்கிறார்கள்.
தவறான செயல் முறை,
மன அழுத்தம், வாழ்க்கை முறை போன்றவை இந்த குறைபாட்டில் மிகப்பெரும் பங்கு வகிக்கிறது என்பதை மறுக்க முடியாது.
அதே நேரம் இந்த குறைபாடு நேரிடாமல் பண்டையகாலங்களில் சில இயற்கை மூலிகைகளை உணவு வடிவில் எடுத்துகொண்டவர்கள் நம் முன்னோர்கள்.
இதை மருந்தாக எண்ணாமல் உணவாக எடுப்பதன் மூலம் ஆண்கள் தாதுவிருத்தி குறையில்லாமல் இருக்க முடியும் அந்தவகையான மூலிகைகள் தான் இப்போது பார்க்க போகிறோம்.
என்னென்ன மூலிகைகள் எப்படி எடுத்துகொள்வது என்பதை தெரிந்துக்கொள்வோம் வாங்க....
"தரையோடுகா ணாவாழயி லை
வழுவ ழுக்கும் நை த்துநல்ல
முருபச் சைபா ம்புடனே
பூனை விதைத்த ண்ணீர் விடும்
கிழங்கரைத்து
உருட்டி நன்றாய் தின்னு பாரே"
அதாவது காணாவாழை எனும் மூலிகை தரையோடு தரையாக படர்ந்திருக்கும்
அதை கண்டு எடுத்து
முருங்கை மரத்து பச்சை பாம்பு (பிஞ்சு) அதை வாங்கி
பூனைக்காலி விதை,
தண்ணீர் விட்டான் கிழங்கு இதையெல்லாம் பசுமையாக கொண்டுவந்து
அரைத்து சுண்டைக்காய் அளவு உருட்டி நிழலில் ஒரு அடைக்காலம் உள்ளர்த்தியெடுத்து
காலை மாலை இரு வேளை காய்ச்சி எடுத்த பசும் பாலில் 24 நாட்கள் (அரைமண்டலம்) சாப்பிட்டு வந்தால்
ஆண்மை அதிகரிக்கும்,
உடல் சூட்டினால் ஏற்படும் விந்து நீர்த்து போகும் பிரச்னை நீங்கி விந்து கெட்டிப்படும்
விந்துவில் உயிர் அணுக்களின் எண்ணிக்கை கூடும்.
அணுக்களின் வளர்ச்சியும், நீந்தும் தன்மையும் அதிகரிக்கும்.
உடல் பலமும், சோர்வும் நீங்கும்,
படபடப்பு நீங்கும்.
இனி குழந்தை பெறமுடியாத நிலை இல்லை
குழந்தை பாக்கியம் உண்டாகும்
குறிப்பு :- எந்த மூலிகை மருந்தை எவ்வளவு அளவில் சேர்க்க வேண்டும் என்ற குறிப்பு நான் இங்கே கொடுக்கவில்லை காரணம்
வராகன், பலம் என்ற கணக்கு சிலருக்கு புரியாது என்பதால்
ஆலோசனை பெற்று இந்த மருந்தை செய்து பயன்படுத்தலாம்
நன்றி.
Comment / Reply From
Popular Posts
Newsletter
Subscribe to our mailing list to get the new updates!