சோனியா காந்திக்கு எதிரான மனு தள்ளுபடி – ஆனால் வெளிச்சத்துக்கு வந்த தேர்தல் மோசடி!
Place: Delhi
Reporter Name: Eye Media
🔹🔸 சோனியா காந்திக்கு எதிரான மனு தள்ளுபடி – ஆனால் வெளிச்சத்துக்கு வந்த தேர்தல் மோசடி!
✍️ வழக்கு தள்ளுபடி
இந்திய குடியுரிமை பெறுவதற்கு முன்பே வாக்காளர் பட்டியலில் சேர்ந்து விட்டதாகக் கூறி, காங்கிரஸ் முன்னாள் தலைவி சோனியா காந்திக்கு எதிராக வழக்குப் பதிவு செய்ய கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
இந்த விவகாரத்தில் சோனியா காந்திக்கு எதிராக FIR பதிவு செய்ய நீதிமன்றம் மறுத்துவிட்டது.
✅ ஆனால்... தேர்தல் ஆணையத்தின் “திருட்டுத்தனம்” அம்பலமாகிறது!
கர்நாடகா சட்டமன்றத் தேர்தல் (2023) முன்பு, ஆலந்தா தொகுதியில் ஆயிரக்கணக்கான வாக்காளர்களை பட்டியலில் இருந்து நீக்குவதற்கான போலி படிவம்-7 விண்ணப்பங்கள் ஆன்லைனில் அனுப்பப்பட்டு மோசடி நடந்தது.
👉 ஒரு BLO (Booth Level Officer) தான் இந்த மோசடியை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தார்.
அவரது சொந்த சகோதரர் பெயரை கூட போலி விண்ணப்பத்தின் மூலம் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க முயன்ற சம்பவம் நடந்தது. அதிலிருந்தே பெரிய சதி வெளிப்பட்டது.
👉 விசாரணையில், 256 வாக்குச்சாவடிகளில் 5,994 பேர் பெயரை நீக்குவதற்கான போலி விண்ணப்பங்கள் ஆன்லைனில் வந்தது கண்டறியப்பட்டது.
👉 ஏற்கனவே 2,494 பேர் பெயர் நீக்கப்பட்டிருந்ததை காங்கிரஸ் புகார் அளித்ததால் “Undo” செய்து மீண்டும் சேர்க்கப்பட்டது.
மொத்தம் 8,500க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் மீண்டும் பட்டியலில் சேர்க்கப்பட்டதால், காங்கிரஸ் வேட்பாளர் 10,348 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இது தடுக்கப்படாமல் இருந்தால், காங்கிரஸ் சில நூறு வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றிருக்கும் அபாயம் இருந்தது.
✅ CID புலனாய்வில் அதிர்ச்சி கண்டுபிடிப்புகள்
போலி படிவம் 7 விண்ணப்பங்கள் டைனமிக் IP வழியாக அனுப்பப்பட்டதால், யார் அனுப்பினர் என்பது கண்டுபிடிக்க முடியாமல் Election Commission “தரவு தர மறுத்தது.”
ஆனாலும் CID, OTP தரவுகளின் அடிப்படையில் 9 மொபைல் எண்களை கண்டுபிடித்தது.
அந்த எண்கள் அனைத்தும் கர்நாடகாவிலேயே இல்லை. ஆந்திரா மற்றும் மகாராஷ்டிராவில் பதிவு செய்யப்பட்டிருந்தன.
அவை சம்பந்தப்பட்டவர்கள் படிக்காத பாமரர்கள்; ஸ்மார்ட்போன் கூட வைத்திராதவர்கள். அதாவது, அவர்களின் எண்கள் ஹேக் செய்யப்பட்டு OTP பயன்படுத்தி போலி விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டிருந்தன.
👉 இதன் மூலம், தேர்தல் மோசடி அதிநவீன டிஜிட்டல் டெக்னாலஜியை பயன்படுத்தி திட்டமிட்ட சதி என்பதை உறுதிப்படுத்தியது.
✅ தேர்தல் ஆணையம் – பாஜக – தொழில்நுட்ப கும்பல் கூட்டுச் சதி
போலி படிவம் 7 மூலம் உண்மையான வாக்காளர்களை நீக்கினர்.
“ஜீரோ” வீடுகளில் நூற்றுக்கணக்கான போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர்.
85 வயது கடந்த மூத்தோரை “முதல் முறை வாக்களிப்பவர்கள்” என காட்டி 12D Form மூலம் வீட்டிலிருந்தபடியே வாக்குகள் போட்டனர்.
வாக்குச்சாவடி CCTV காட்சிகள் 45 நாட்களில் அழிக்கப்படும் சட்டம் கொண்டு வந்தனர்.
இதன் மூலம் தேர்தல் ஆணையம் நேரடியாக பாஜகவுடன் சேர்ந்து தேர்தல் திருட்டில் ஈடுபட்டது தெளிவாகிறது.
✅ மக்கள் கோரிக்கை
இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் பாஜக தலைமையினரின் தேர்தல் மோசடி இப்போது சுத்தமாக அம்பலமாகி விட்டது.
⚖️ எனவே:
பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா பாஸ்போர்ட்டுகளை பறிமுதல் செய்ய வேண்டும்.
இவர்கள் நாட்டை விட்டு ஓடிவிடும் அபாயம் உள்ளது.
குடியரசுத் தலைவர், இவர்களின் ஆட்சியை கலைத்து உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.
இந்திய ஜனநாயகத்தை காப்பாற்ற சுதந்திர நீதித்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
📌 முடிவுரை:
இன்று நடந்துகொண்டிருப்பது ஒரு “தேர்தல் மோசடி” மட்டுமல்ல, இந்திய ஜனநாயகத்தின் மீது நேரடியாக நிகழ்த்தப்பட்ட “தீவிர குற்றம்.”
இதில் சிக்கியுள்ளவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
Comment / Reply From
Popular Posts
Newsletter
Subscribe to our mailing list to get the new updates!