Dark Mode
Breaking News
  • Sunday, 18 October 2026 Sunday,
    18 October 2026
கம கம பீர்க்கங்காய் கூட்டு செய்வது எப்படி- பிருங்கிமலை கோபால்

கம கம பீர்க்கங்காய் கூட்டு செய்வது எப்படி- பிருங்கிமலை கோபால்

Place: சென்னை

271 0
PHNjcmlwdCBhc3luYyBzcmM9Imh0dHBzOi8vcGFnZWFkMi5nb29nbGVzeW5kaWNhdGlvbi5jb20vcGFnZWFkL2pzL2Fkc2J5Z29vZ2xlLmpzP2NsaWVudD1jYS1wdWItMzgyNDE2ODE4NzgyMTcxNSIKICAgICBjcm9zc29yaWdpbj0iYW5vbnltb3VzIj48L3NjcmlwdD4=

கம கம பீர்க்கங்காய் கூட்டு செய்வது எப்படி- பிருங்கிமலை கோபால்
-----------------------------------------------------------
பீர்க்கங்காய் கூட்டு
தேவையான பொருட்கள்

எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
கடலை பருப்பு - 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
பெருங்காய தூள் - 1/4 தேக்கரண்டி
வெங்காயம் - 1 நறுக்கியது
பச்சை மிளகாய் - 5 கீறியது
பூண்டு - 5 பற்கள்
ஊறவைத்த கடலை பருப்பு - சின்ன கப்
உப்பு - 1 தேக்கரண்டி
மஞ்சள்தூள் - 1/4 தேக்கரண்டி
தண்ணீர் - 1 கப்
பீர்க்கங்காய் - 2
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
தனியாதூள் - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை
கொத்தமல்லி இலை நறுக்கியது

செய்முறை
1.முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி, கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, கடுகு, சீரகம் சேர்த்து நன்கு வதக்கவும்.
2. கடுகு பொரிந்ததும், பெருங்காய தூள், நறுக்கிய வெங்காயம், கீறிய பச்சை மிளகாய், தட்டிய பூண்டு பற்கள் சேர்த்து வதக்கவும்.
3.ஒரு நிமிடம் கழித்து, அரை மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்த கடலை பருப்பு சேர்க்கவும்.
4.பிறகு உப்பு, மஞ்சள் தூள் சேர்க்கவும்.
5.அதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து, அனைத்தையும் கலந்து, கடாயை ஒரு மூடி வைத்து, குறைந்தபட்சம் பத்து நிமிடங்களுக்கு மிதமான தீயில் வேக விடவும்.
6. 10 நிமிடம் கழித்து மிளகாய் தூள், தனியா தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.
7.அதனுடன் கறிவேப்பிலையைச சேர்த்து, மீண்டும் கடாயை மூடி, ஐந்து நிமிடங்கள் வேக விடவும்.
8.ஐந்து நிமிடம் கழித்து நறுக்கிய கொத்தமல்லி தூவி கலந்து பரிமாறவும்.
9. சுவையான இந்த பீர்க்கங்காய் கடலை பருப்பு கூட்டு, சூடான சாதம் மற்றும் சப்பாத்தி உடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

Comment / Reply From

Newsletter

Subscribe to our mailing list to get the new updates!

Editor Page

spirituality