பிரபஞ்சத்தை அடைவது எப்படி ? பிருங்கிமலை கோபால்
Place: சென்னை
பிரபஞ்சத்தை அடைவது எப்படி ? பிருங்கிமலை கோபால்
**************************************
பிரபஞ்சத்தை அடைவது எப்படி ? பிருங்கிமலை கோபால்
----------பிரபஞ்சம் ஈர்க்க வேண்டுமா----------
-------------universal gravitation ( gravity) -------------
உடல் ஆரோக்யமாக இருந்தால் மட்டுமே, மனம் ஆரோக்யமாக இருக்கும்
மனம் ஆரோக்யமாக இருந்தால் மட்டுமே பிரபஞ்சம் ஈர்க்கும், இது இயற்கை விதி.
இந்த ஜென்மத்திலாவது, ஆரோக்யமாக வாழ்ந்து விட்டு பாவத்தை அடுத்த தலைமுறைக்கு கடத்தாமல் இருப்போம்
நோய்களில் இரண்டு வகை உள்ளது.
1, செல்கள் சாராத நோய்.
(இது சாதாரணமாக, மழை, வெயில், காற்று, குளிர், பனி போன்ற சீதோஷ்ண நிலை, மாற்றங்களால் , அனைவருக்கும், வந்து வந்து போகும் தற்காலிக நோய்கள்,
இதற்கு வைத்தியம் எல்லார் வீட்டு, அஞ்சறை பெட்டியிலேயே, இருக்கிறது, இதற்கு பணம் செலவு செய்ய தேவையில்லை, யார் வேண்டுமானாலும், வைத்தியம் சொல்லலாம், செய்யலாம் பாவமில்லை. (இது மானுட வைத்தியம், பாட்டி வைத்தியம்)
2, செல்கள் சார்ந்த நோய்.
இது அவரவர் பாவ வினைகளின், தாக்கத்தால், வரும், நிரந்தரமான, நோய்கள், இதற்கு இலவசமாக வைத்தியம், பார்ப்பது, சொல்வது, அவர்களின், கர்மாவை, நீங்கள் சுபப்பதற்கு சமம்,
இதனால் தான், அனேக இரக்கமுள்ள வைத்தியர்கள், "இலவசமாக" வைத்தியம் பார்த்து, வறுமைக்கோட்டுக்கு கீழே போய் காணமல் போனார்கள்.
வைத்தியம் தெரியாமலேயே, வைத்தியம் சொல்லியவர்களால் தான், இன்று வீட்டுக்கு இருவர், நிரந்தர நோய்க்கு, நிரந்தரமாக மருந்தெடுக்கும், நிர்பந்தம் வந்து விட்டது.
சித்த வைத்தியம், ஆதி சித்தன் சொத்து, உங்களால், மரியாதை,கொடுக்கத் தெரியா விட்டாலும், பரவாயில்லை,
இலவச வைத்தியம், மலிவான வைத்தியம் என்று, மக்கள் மனங்களில் பதிய வைத்து, அவர்களின் பாவங்களை உங்களின்அடுத்த சந்ததிகளுக்கு கடத்த வேண்டாம்,
சித்த வைத்தியம் ஒரு குணமாக்கும் கலை.
நோயை பெரிதாக்கி நிரந்தரமாக்கும் கலையல்ல.
டாஸ்மார்க், பெப்சி, கோக், பரோட்டா, இதை போன்று, உங்கள் ஆரோக்யத்தை கெடுக்கக் கூடிய எத்தனையோ விஷயங்களுக்கு,
யோசிக்காமல் செலவழித்து ஆரோக்கியத்தை கெடுத்துக் கொண்டிருக்கும் மக்கள்
நெல் முனையளவாவது யோசித்து, அவரவர் குடும்ப ஆரோக்யத்திற்கும் கொஞ்சம் செலவழிக்கலாமே.
சிலர் யோசிக்கலாம், நல்ல வைத்தியர்களை, நாங்கள் எங்கு போய்தான் தேடுவது ,
நாம் எங்கேயும் போய் தேடவே வேண்டாம், நாம் எப்படியோ அப்படித்தான் உலகம்.
(கழிவுகளின் தேக்கமே நோய், குறைந்த பட்சம் உடல் கழிவுகளை மட்டுமாவது ஒரு மண்டலம் நீக்கிக் கொண்டு ஆரோக்கியத்துக்குள் வந்து மனதுக்கு பிடித்ததை சாப்பிடத் தொடங்கலாமே, பணத்தை சாப்பிட முடியாது)
நல்ல எண்ணம் உள்ளோர் இதை Share செய்து, அதன் மூலம், நாலுபேர் ஆரோக்யத்துக்குள் வரும்போது, கண்டிப்பாக பிரபஞ்சம் உங்கள் பிராத்தனைகளை ஈர்க்கும்.
நினைவில் கொள்ளுங்கள் தானத்தில் சிறந்தது அன்னதானம் தான், மாற்றுக்கருத்தே இல்லை ஆனால் ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே, வயிரோடு, மனமும் நிறையும் வாழ்த்த மனமும் வரும்.
தொடர்ந்து மருந்து மாத்திரை எடுத்துக் கொண்டிருப்போருக்கு சாப்பாடு போட்டுப் பாருங்கள்,
சாப்பாடு நல்லா இருக்குன்னு சொல்ரதுக்கு கூட அவர்களுக்கு மனம் வராது, காரணம் அவர்கள் மனதுக்கு பிடித்த எதையுமே திருப்தியாக உண்ண முடிவதில்லையே,
மனம் நிறையப் போவதும் இல்லை
விஞ்ஞானம் சொல்வதை மட்டுமே சாப்பிட முடிகிறது.
(மனம் ஆரோக்கியம் இல்லாதவர்களுக்கு, வேறு யாருக்காவது சுகர், ப்ரசர், கொலஸ்ட்ரால், இன்னும் இது போன்ற நோய்கள் இருப்பது தெரிந்தால் மனம் மகிழ்ச்சியடைவார்கள்.)
நீங்கள் அவிக்கும் இட்லி சரியாக வேகவில்லை யென்றால் கூட...! உங்களுக்கு சுகர் இருக்கான்னு கேட்கும் காலம் வந்து விட்டது.
(உடலையும், மனதையும் ஆரோக்யத்திற்குள் கொண்டு வராம, மனத் தெளிவில்லாம
head phone மாடிக்கிட்டு யூ ட்யூப் பார்த்து ஒரே நாள்ல பிரபஞ்சம் நம்மள ஈர்த்து கோடி கோடியாய் கொட்டிரும்னு நம்பி பாதி பேர் மன நோயாளியானது தான் மிச்சம்.)
நீங்கள் உடல் மன ஆரோக்யத்திற்குள் இருந்தால் மட்டுமே பிரபஞ்சம் அதுவாகவே உங்களை ஈர்க்கும்.
உடல் மன ஆரோக்யம் இல்லாமல் பிரபஞ்சத்தைத் தேடியவர்கள் அனேகர் தொலைந்துதான் போயிருக்கிறார்கள்.
விழித்துக் கொள்வோம்,
நம் அடுத்த தலைமுறையாவது சுகர், ஆண்மைக்குறைபாடு இல்லாமல் ஆரோக்யமாக வாழ வழி செய்யலாமே.
அடுத்தவர் குறைகளை மட்டுமே கண்டு பிடித்து திருப்தியாகும் மனநிலையை மாற்றிக் கொள்ளுங்கள்
அப்பொழுது தான் வீட்டில் மகிழ்ச்சி நிலைக்கும்
-பிருங்கிமலை கோபால்
Enter Your Details
Comment / Reply From
Popular Posts
Newsletter
Subscribe to our mailing list to get the new updates!