Dark Mode
Breaking News
  • Sunday, 18 October 2026 Sunday,
    18 October 2026
பட்டா, சிட்டா சொத்தின் உரிமைக்கான ஆவணங்கள் கிடையாது, பட்டா மாற்றம் செய்ததுவிடுவதானால் சொத்துக்கு ஒருவர் உரிமையாளர் என்றாகிவிடாது, உச்ச நீதிமன்றம் உத்தரவு- Journalist Gopaal SJ

பட்டா, சிட்டா சொத்தின் உரிமைக்கான ஆவணங்கள் கிடையாது, பட்டா மாற்றம் செய்ததுவிடுவதானால் சொத்துக்கு ஒருவர் உரிமையாளர் என்றாகிவிடாது, உச்ச நீதிமன்றம் உத்தரவு- Journalist Gopaal SJ

Place: சென்னை

353 0
PHNjcmlwdCBhc3luYyBzcmM9Imh0dHBzOi8vcGFnZWFkMi5nb29nbGVzeW5kaWNhdGlvbi5jb20vcGFnZWFkL2pzL2Fkc2J5Z29vZ2xlLmpzP2NsaWVudD1jYS1wdWItMzgyNDE2ODE4NzgyMTcxNSIKICAgICBjcm9zc29yaWdpbj0iYW5vbnltb3VzIj48L3NjcmlwdD4=

பட்டா மாற்றம் செய்ததுவிடுவதானால் இடம் ஒருவருக்கு சொந்தம் என்றாகிவிடாது, அது வரி கட்ட மட்டுமே என்று, உச்ச நீதிமன்றம் தீர்ப்பு.

உச்ச நீதிமன்ற தீர்ப்பு நகலை பதிவிறக்கம் செய்ய லிங்க்: https://drive.google.com/file/d/18_xvJwHItsK8UhhfD3OHuiERmyT1lwyx/view?usp=drivesdk

பட்டா, சிட்டா சொத்தின் உரிமைக்கான ஆவணங்கள் கிடையாது, பட்டா மாற்றம் செய்ததுவிடுவதானால் சொத்துக்கு ஒருவர் உரிமையாளர் என்றாகிவிடாது, உச்ச நீதிமன்றம் உத்தரவு.
-journalist Gopaal SJ
உச்ச நீதிமன்ற உத்தரவு நகலை பதிவிறக்கம் செய்ய லிங்க்:
https://drive.google.com/file/d/18WmD6XxhuRXaEorgkvxHilVHiMCmh6qT/view?usp=drivesdk

பதிவு இல்லாத ஆவணத்தை எந்த காரணத்துக்கும் சீர் தூக்கி பார்க்க முடியாது என்று தீர்ப்பு.

உச்ச நீதிமன்ற தீர்ப்பு நகலை பதிவிறக்கம் செய்ய லிங்க்: https://drive.google.com/file/d/14-D52M-HekvPaDRKsl8TwBJF-7PKItor/view?usp=drivesdk

அரசு நிலம் ஆக்கிரமிப்பு செய்து கட்டிடங்கள் கட்டி வாடகை வசூல் செய்தவர்களிடமிருந்து இழப்பீடை வசூலிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு நகலை பதிவிறக்கம் செய்ய லிங்க்: https://drive.google.com/file/d/1uwGdppn3Yi4CNdYYoVpr7EQ4QD02bZz6/view?usp=drivesdk

நில அளவீட்டுப் பணியை 30 நாட்களில் முடிக்காத அதிகாரிகளை பணி நீக்கம் கூட செய்யலாம்- உயர் நீதிமன்றம் உத்தரவு.

Madurai bench of Madras HC issues guidelines for surveying of land.
----------------
WP(MD).13465/2020 ASAITHAMBI Vs. THE REVENUE DIVISIONAL OFFIC Dated : 05/10/2020.
------------------

உயர் நீதிமன்ற தீர்ப்பு நகலை பதிவிறக்கம் செய்ய லிங்க்: https://drive.google.com/file/d/1grdwWzPLXECaAU1GFtPPnC_wzxtLz-k2/view?usp=drivesdk

மதுரையைச் சேர்ந்தவர் ஆசைத்தம்பி. இவர் தனக்கு சொந்தமான நிலத்தை அடிக்கடி அளவீடு செய்ய வேண்டும் என பொன்மேனி கிராம நிர்வாக அலுவலர் தொந்தரவு செய்வதை எதிர்த்து உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்து நீதிபதி எஸ்.வைத்தியநாதன் பிறப்பித்த உத்தரவு:-

தற்போது டிஜிட்டல் உலகில் உள்ளோம். இதனால் நவீன தொழில்நுட்பம் மற்றும் நவீன இயந்திரங்களை பயன்படுத்தி நில அளவீடு பணி மேற்கொள்ள வேண்டும்.

நில அளவீடு அல்லது மறு அளவீட்டுக்கு பணம் செலுத்தியதில் இருந்து 30 நாளில் நில அளவீடு செய்ய வேண்டும், தவறினால் சம்பந்தப்பட்டவர்களுக்கு கட்டணத்தை திரும்ப வழங்க வேண்டும், இந்த தாமதத்துக்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் சம்பளத்தில் ரூ.2500 பிடித்தம் செய்ய வேண்டும்.

மேலும் அப்பணியை மேற்கொள்ள வேண்டிய அளவையர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும், பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். தேவைப்பட்டால் பணி நீக்கம் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நில அளவீடு தொடர்பாக தனிப்பதிவேடு பராமரிக்க வேண்டும். அதில் மனு செய்யும் நபர், அளவீடு செய்ய வேண்டிய இடம், அளவீடு செய்யப்பட்ட தேதி உள்ளிட்ட விபரங்களை குறிப்பிட வேண்டும்.

அந்த பதிவேட்டை உயர் அதிகாரி அடிக்கடி ஆய்வு செய்ய வேண்டும்.
நில அளவீட்டு பணிக்காக ட்ரோன் தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும். இதனால் அரசு நிலம், நீர் நிலைகள் ஆக்கிரமிப்பை கண்டுபிடிக்கலாம்.

நில அளவீடு அல்லது மறு அளவீடு பணியை முழுமையாக புகைப்படம், வீடியோ பதிவு செய்ய வேண்டும்.
இதை சம்பந்தப்பட்டவர்கள் கட்டணம் செலுத்தி கேட்டால் வழங்கலாம்.

இந்த வழிகாட்டுதல்கள் உள்ளடங்கிய சுற்றறிக்கையை ஒரு மாதத்தில் தமிழக அரசு பிறப்பிக்க வேண்டும்,
சில நில அளவையர்கள் வருவாய்த்துறை அரசுக்கு வருவாய் குவிக்கும் துறையாக கருதாமல் தங்களுக்கு வருவாய் சேர்க்கும் துறையாக கருதி செயல்படுகின்றனர்.

ஒரு காலத்தில் தமிழகம் நிர்வாகத்தில் சிறந்த மாநிலமாக இருந்தது. ஊழல் அதிகாரிகளால் அந்த பெயருக்கு தற்போது களங்கம் ஏற்பட்டுள்ளது, மனுதாரர் நிலத்தை நியாயமான நில அளவையர் ஒருவரை நியமித்து அளவீடு செய்ய வேண்டும்,
இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

நீதிமன்ற ஆணை எதனையும் குறிப்பிட்டு அதன்படி நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பொது அதிகார அமைப்பு அறிவித்தால், அந்த பொது அதிகார அமைப்பிடம் இருந்து குறிப்பிட்ட நீதிமன்ற ஆணையின் நகல்களை கேட்கலாம்.

Public authority initiates action on a given orders of a Court or a Tribunal, or is required by such an order to initiate certain actions, a citizen should be free to access such a court order even if it is with a public authority other than the court.

மத்திய தகவல் ஆணையத்தின் உத்தரவு நகலை பதிவிறக்கம் செய்ய லிங்க்: https://drive.google.com/file/d/1koN0FtrDZcVHEVAAAxNZC7kSs7w4xNzV/view?usp=drivesdk

அரசு புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வழங்க முடியாது, தனியார் பள்ளியின் கோரிக்கை நிராகரிப்பு சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு.

உயர் நீதிமன்ற தீர்ப்பு நகலை பதிவிறக்கம் செய்ய லிங்க்: https://drive.google.com/file/d/1_zVnP0yCVAScOtykoPValxqOIVVJ8Jis/view?usp=drivesdk

நிலத்தின் உரிமையாளருக்கு முறையாக அறிவிக்காமல் நிலத்தை கையகப்படுத்துவது சட்டவிரோதம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு.

உச்ச நீதிமன்ற தீர்ப்பு நகலை பதிவிறக்கம் செய்ய லிங்க்: https://drive.google.com/file/d/18_xvJwHItsK8UhhfD3OHuiERmyT1lwyx/view?usp=drivesdk

நன்றி...!

பட்டா, சிட்டா சொத்தின் உரிமைக்கான ஆவணங்கள் கிடையாது, பட்டா மாற்றம் செய்ததுவிடுவதானால் சொத்துக்கு ஒருவர் உரிமையாளர் என்றாகிவிடாது, உச்ச நீதிமன்றம் உத்தரவு- Journalist Gopaal SJ

Comment / Reply From

Newsletter

Subscribe to our mailing list to get the new updates!

Editor Page

spirituality