Dark Mode
Breaking News
  • Sunday, 18 October 2026 Sunday,
    18 October 2026
மோடி மணிப்பூர் பயணம் மக்கள் கருத்து

மோடி மணிப்பூர் பயணம் மக்கள் கருத்து

Place: Manipur

Reporter Name: Eye Media

228 0
PHNjcmlwdCBhc3luYyBzcmM9Imh0dHBzOi8vcGFnZWFkMi5nb29nbGVzeW5kaWNhdGlvbi5jb20vcGFnZWFkL2pzL2Fkc2J5Z29vZ2xlLmpzP2NsaWVudD1jYS1wdWItMzgyNDE2ODE4NzgyMTcxNSIKICAgICBjcm9zc29yaWdpbj0iYW5vbnltb3VzIj48L3NjcmlwdD4=

’பிரதமர் மோதியின் வருகை’ - மணிப்பூர் சொல்வது என்ன?

➤ கடந்த 2 ஆண்டுகளாக மணிப்பூரில் மைத்தேயி- குக்கி இனக் குழுக்களிடையே பெரும் மோதல் நிகழ்ந்து வரும் நிலையில், இந்த கலவரம் தொடங்கியப் பின் முதல் முறையாக பிரதமர் மோதி நாளை மணிப்பூருக்குச் செல்ல உள்ளதாகக் கூறப்படுகிறது, அங்கே 8,500 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

➤ இதற்கிடையே பிரதமர் மோதியின் வருகைக்கு முன்பே மணிப்பூரின் ஃபுங்யார் மண்டல பாஜக உறுப்பினர்கள் 43 பேர் கட்சியிலிருந்து ராஜினாமா செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

➤ நிர்வாகிகளுடன் ஆலோசனை இல்லாதது, அனைவரையும் உள்ளடக்கிய தன்மை இல்லாதது மற்றும் தலைமைக்கு மரியாதை இல்லாதது ஆகியவையே இந்த முடிவிற்கு முக்கிய காரணங்களாகக் கூறப்படுகின்றன.

➤ ”வரவேற்பு விழாவில் பிரதமர் மோதி பங்கேற்பதற்குப் பதிலாக இன வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுடன் கலந்துரையாட வேண்டும்,” என்று இம்பால் ஹமார் இடம்பெயர்ந்த குழு கூறியுள்ளது.

➤ ”பிரதமர் மோதியை மணிப்பூருக்கு வரவேற்கிறோம். ஆனால் கண்களில் கண்ணீருடன் எங்களால் நடனமாட முடியாது,” என சுராசந்த்பூர் மாவட்ட கேங்டே மாணவர் அமைப்பு தெரிவித்துள்ளது.

மோடி மணிப்பூர் பயணம் மக்கள் கருத்து

Comment / Reply From

Newsletter

Subscribe to our mailing list to get the new updates!

Editor Page

spirituality