Dark Mode
Breaking News
  • Sunday, 18 October 2026 Sunday,
    18 October 2026
பேரறிஞர் அண்ணாவிடம் இருந்து நாம் வாழ்க்கை பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டியவை மிக மிக அதிகம்.

பேரறிஞர் அண்ணாவிடம் இருந்து நாம் வாழ்க்கை பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டியவை மிக மிக அதிகம்.

Place: சென்னை

Reporter Name: Eye Media

141 0
PHNjcmlwdCBhc3luYyBzcmM9Imh0dHBzOi8vcGFnZWFkMi5nb29nbGVzeW5kaWNhdGlvbi5jb20vcGFnZWFkL2pzL2Fkc2J5Z29vZ2xlLmpzP2NsaWVudD1jYS1wdWItMzgyNDE2ODE4NzgyMTcxNSIKICAgICBjcm9zc29yaWdpbj0iYW5vbnltb3VzIj48L3NjcmlwdD4=

பேரறிஞர் அண்ணாவிடம் இருந்து நாம் வாழ்க்கை பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டியவை மிக மிக அதிகம்.

முதல் பாடம். தொடர்ந்து கற்றல். அம்பு வெகு தூரம் போவதற்கு எப்படி வில்லின் நாணை வெகுவாக இழுக்க வேண்டுமோ, அந்த அளவிற்கு ஒரு மனிதன் வெகு உயரம் போவதற்கு அதிகமான ஆழ்ந்த கற்றல் தேவை.

இரண்டாவது.
தந்தையைப் போன்ற ஒரு மிகப்பெரிய ஆளுமை. அவரிடம் வளர்ந்தவர் தான். ஆனாலும் அவர் தற்போது கொண்டுள்ள கொள்கை நமது லட்சியங்களுக்கு உறுதுணையாக இருக்காது, என்று அவரிடம் இருந்து பிரிந்து, ஒரு மிகப்பெரிய இளைஞர் பட்டாளத்தையும் தன்னுடன் அழைத்து வந்து நாம் வெல்லலாம் என நம்பிக்கையூட்டியது.

எவ்வளவுதான் முக்கியமானவராக இருந்தாலும், நமது லட்சியத்தை அடைவதற்கு அங்கு இருப்பது சரி இல்லை என்றால் விலகி விட வேண்டும்.

மூன்றாவது leadership quality

அறிஞர் அண்ணாவின் தம்பிகளாக அப்போது இருந்தவர்கள் எல்லோருமே ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் அல்ல. அந்தக் காலத்திலேயே பட்டம் பெற்றவர்கள். அனுபவ அறிவும் எழுத்தாளுமையும் கொண்டவர்கள், திரைப்படங்களில் நடித்து பெரும் கூட்டத்தை தனக்காக கொண்டிருந்தவர்கள். அத்தனை பேரையும் தன் லட்சியத்திற்காக வேலை பார்க்க வைத்தவர். அவரவர்களுக்கு என்னென்ன இடம் வேண்டுமோ அதை கொடுத்து தட்டிக் கொடுத்து வேலை வாங்கியவர்.

தம்பிகள் பெயர் பெற்றாலும் ஈகோ இல்லாமல் அவர்களை அங்கீகரித்தவர். ஒரு தலைவனுக்கு உண்டான மிகப்பெரும் தன்மையே தன் கீழ் உள்ளவர்கள் புகழ் பெறுவதையும் பெருந்தன்மையுடன் வரவேற்பது தான். அவர்கள் இன்னும் மேலே வர வர நாம் இன்னும் மேலே செல்லலாம். மேலும் அவர்களுக்குள் எந்தவிதமான கசப்புகளும் வந்துவிடாமல் அரவணைத்து சென்றவர்.

நான்காவது persistent.

நாம் கொண்ட கொள்கையில் வெல்வோமா என்று தெரியாது. மிகப்பெரிய பணவசதியும் இல்லை. ஆனால் 18 ஆண்டுகள் ஒரு கட்சியை ஆணிவேரிலிருந்து வளர்த்தெடுத்து, அதை கொண்டு இந்திய தேசியத்தின் மிகப்பெரும் சக்தியை வீழ்த்தி, ஆட்சிக் கட்டிலில் அமர வைப்பதற்கு எல்லாம்

எத்தனை நெருப்பாறுகளை நீந்தி கடந்திருக்க வேண்டும்?
எவ்வளவு எவரெஸ்ட்களை ஏறிக் கடந்திருக்க வேண்டும்?
எத்தனை மனச்சுமையை கொண்டிருக்க வேண்டும்?

அதையெல்லாம் சிரித்த புன்முகத்துடன் கடப்பதற்கு ஒரு மிகப்பெரிய மன உறுதி, பொறுமை வேண்டும்.

ஐந்தாவது Create a foolproof system for operations.

எந்த ஒரு மிகப்பெரிய நிறுவனமுமே பெர்சனாலிட்டி களை நம்பிக் கொண்டிருக்கக் கூடாது, சிஸ்டத்தை தான் நம்பி இருக்க வேண்டும். பெர்சனாலிட்டிகள் வருவார்கள் போவார்கள். அவர்களது வேலைத்திறமும் குறையலாம். புது சவால்களை அவர்களால் சந்திக்க முடியாமலும் போகலாம்

ஆனால் ஒரு கட்டுக்கோப்பான சிஸ்டம் என்பது எல்லாவற்றையும் தாங்கி மேலே வரக்கூடியது. அப்படிப்பட்ட ஒரு அட்டகாசமான கட்சி சிஸ்டத்தை கொண்டு வந்தார் அண்ணா. கிளைக் கழகம் துவங்கி பொதுச்செயலாளர் வரை என்னென்ன பொறுப்பு என்னென்ன செய்ய வேண்டும் என்று அவர் போட்ட blueprint கிட்டத்தட்ட 60 ஆண்டுகளாக அவர் வழிவந்த கட்சிகளை உச்சத்தில் நிறுத்தி இருக்கிறது.

இதுதான் சிஸ்டம் கொண்டு வருதல்.

கடந்த அறுபது ஆண்டுகளில் இரண்டே கட்சிகள் தான் தமிழ்நாட்டை ஆண்டு வந்திருக்கின்றன. ஒன்று அண்ணாவே துவங்கிய கட்சி. இரண்டாவது அந்தக் கட்சியின் மூலம் செங்குத்து பிளவில் சரிபாதி ஆட்களை வெளியே கொண்டு சென்று எம்ஜிஆர் அவர்கள் ஆரம்பித்த கட்சி. அந்தக் கட்சியும் ஆரம்பித்து 50 ஆண்டுகளை கடந்து விட்டது.

ஆனால் ஒரு மூன்றாவது கட்சியை இத்தனை ஆண்டுகளில் யாராவது ஆரம்பித்து தமிழ்நாட்டில் ஆட்சிப் பொறுப்பிற்கு வர முடிந்து இருக்கிறதா என்று எண்ணிப் பார்த்தாலே அண்ணா விதைத்துச் சென்ற விதைகளின் வீரியம் புரியும். நீங்கள் அப்படி ஒரு மாடலை இந்த இரண்டு கட்சிகளை மீறி கொண்டு வர வேண்டும்.

வருபவர்கள் எல்லாம் மூன்றாவது கட்சியாக தான் மாற முடிகிறதே தவிர, முதல் இரண்டு இடங்களுக்கு வரவே முடிவதில்லை.

அப்படிப்பட்ட ஒரு சிஸ்டத்தை தமிழ்நாட்டில் கிரியேட் செய்துவிட்டு போயிருக்கிறார் அண்ணா.

Comment / Reply From

Newsletter

Subscribe to our mailing list to get the new updates!

Editor Page

spirituality