ஆதரவாளர்கள் மத்தியில் எடுக்கப்பட்ட ஷாக் முடிவு! OPS ooen Talk
Place: velachery
Reporter Name: Eye Media Tamil
ஆப்ஷன் A விஜய்.. ஆப்ஷன் B திமுக.. ஓபிஎஸ் கொடுத்த 2 ஆப்ஷன்கள்.. இறுதியில் ஆதரவாளர்கள் மத்தியில் எடுக்கப்பட்ட ஷாக் முடிவு!
சென்னை வேப்பேரியில் நடைபெற்ற ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலான மாவட்ட செயலாளர் கூட்டத்தில் யாருடன் கூட்டணி வைக்க விரும்புகிறீர் என மாவட்ட செயலாளர்களிடம் ஓ பன்னீர்செல்வம் சார்பாக கருத்து கேட்கப்பட்டது. இதில் இரண்டு ஆப்ஷன் கொடுத்து கருத்து கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றத் தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகத்தின் (AIADMTUMK) நிர்வாகிகள் உடன் நேற்று ஓ பன்னீர்செல்வம் சந்திப்பு நடத்தினார். இந்த சந்திப்பில் பல விஷயங்கள் ஆலோசனை செய்யப்பட்டன. அதன்படி அதிமுகவில் மீண்டும் இணையலாமா?அதிமுகவுடன் கூட்டணி வைக்கலாமா? அல்லது தவெக உடன் கூட்டணி வைக்கலாமா? திமுக உடன் கூட்டணி வைக்கலாமா? என்று ஓ பன்னீர்செல்வம் ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது.
இதில் எடப்பாடி பழனிச்சாமியின் அதிமுக உடன் இனி இணைய வேண்டாம்.. அவர் இறங்கி வருவது போல தெரியவில்லை. இனி அதிமுக உடன் இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை .. இபிஎஸ் உடன் இனி இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று ஓபிஎஸ் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
இன்னொரு பக்கம் மாவட்ட செயலாளர் கூட்டத்தில் யாருடன் கூட்டணி வைக்க விரும்புகிறீர் என மாவட்ட செயலாளர்களிடம் ஓ பன்னீர்செல்வம் சார்பாக கருத்து கேட்கப்பட்டது. இதில் இரண்டு ஆப்ஷன் கொடுத்து கருத்து கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது. Option a தவெக Option b திமுக என்று இரண்டு ஆப்ஷன் கொடுத்து கேள்வி கேட்கப்பட்டது.
இரு ஆப்ஷன்களை கொடுத்து மாவட்ட செயலாளர்களின் கருத்துக்கள் பெறப்பட்டது. இதில் பெரும்பாலான நிர்வாகிகள் தவெகவுடன் கூட்டணி வைக்கவே அதிகளவில் விருப்பம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றத் தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகத்தின் (AIADMTUMK) பெரும்பாலான நிர்வாகிகள், அதிமுக ஒருங்கிணைப்பு முயற்சிகளை நிராகரித்த எடப்பாடி கே. பழனிசாமிக்கு பாடம் புகட்ட நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்துடன் (TVK) இணையத் தயாராக இருப்பதாக ஓ பன்னீர்செல்வத்திடம் தெரிவித்தாக கூறப்படுகிறது. ஒரு சிறு பகுதியினர் தி.மு.க.வுடன் கூட்டணி வைக்க விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இந்தக் கழகத்தை வழிநடத்தி வரும் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், "தை பிறந்தால் வழி பிறக்கும்" என்று கூறி.. பொங்கல் முடியும் வரை நாம் முடிவு எடுக்க வேண்டாம்.. அதன் பின் முடிவு எடுக்கலாம் என்று இப்போதைக்கு தனது முடிவைத் தள்ளிப் போட்டுள்ளார். எனினும், பழனிசாமிக்கு நிச்சயம் ஒரு பாடம் புகட்டுவோம் என்றும், இனி கட்சி ஒருங்கிணைப்பு என்று கோர மாட்டோம் என்ற தனது ஆதரவாளர்களின் கருத்தை ஏற்றுக்கொண்டதாகவும் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
செவ்வாய்க்கிழமை அன்று, பன்னீர்செல்வம் மாவட்டச் செயலாளர்களிடம் தனித்தனியாக கருத்துக்களைக் கேட்டபோது, 80%க்கும் அதிகமானோர் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்துடன் இணைய வலியுறுத்தினர். தேசிய ஜனநாயகக் கூட்டணி தன்னை கைவிட்டுவிட்ட நிலையில், குறைந்த தொகுதிகளுக்காக மீண்டும் அங்கு செல்வது சுயமரியாதைக்கு உகந்ததல்ல என அவர்கள் தெரிவித்தனர். சுமார் 15% நிர்வாகிகள், சில மூத்த தலைவர்கள் உட்பட, தி.மு.க.வை ஆதரிப்பது சிறந்தது என்று கூறினர்.
இருப்பினும், அரசியல் நிலவரங்களை உன்னிப்பாகக் கவனித்து வரும் பன்னீர்செல்வம், தனது முடிவை மேலும் மூன்று வாரங்களுக்கு ஒத்திவைத்துள்ளார். டிசம்பர் 23 ஆம் தேதி காலை வரை ஒருங்கிணைப்புக்கு ஓ.பி.எஸ். கால அவகாசம் கொடுத்தார். ஆனால் பழனிசாமி அதை ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே, இனிமேல் , பழனிசாமியிடம் ஒருங்கிணைப்புக்கு வேண்டுகோள் விடுப்பதைத் தவிர்த்து, தனி பாதையில் செல்வோம் என்று ஓ பன்னீர்செல்வம் முடிவு எடுத்துள்ளார்.
இந்த கூட்டத்தில், மூத்த நிர்வாகி ஆர். வைத்திலிங்கம், பழனிசாமியை கடுமையாக விமர்சித்தார். எடப்பாடி பழனிசாமி தலைமைப் பொறுப்பில் இருக்கும் வரை அதிமுகவுடன் எந்தவிதமான இணைப்புக்கும் சாத்தியமில்லை என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார். "இனி பழனிசாமியைத் தோற்கடிப்பதே எங்கள் நோக்கம்" என்று ஓ.பி.எஸ். ஆதரவு தொண்டர்களின் ஆரவாரங்களுக்கு மத்தியில் அவர் கூறினார்.
கடைசியாக பேசிய பன்னீர்செல்வம், 2024 மக்களவைத் தேர்தலில் பழனிசாமி தலைமையில் அதிமுக ஏழு தொகுதிகளில் டெபாசிட் இழந்ததுடன், 14 தொகுதிகளில் (அதாவது 126 சட்டமன்றத் தொகுதிகளில் தோல்வி) மூன்றாவது இடத்தைப் பிடித்தது எனக் குறிப்பிட்டார். அதிமுகவிற்கு இத்தகைய அவமானத்தைக் கொண்டு வந்த பழனிசாமிக்கு நாம் தக்க பாடம் புகட்ட வேண்டும் என்று தொண்டர்களின் உற்சாக கரவொலிக்கு மத்தியில் பன்னீர்செல்வம் மேலும் தெரிவித்தார்.
பொங்கலுக்கு பின் திமுக உடன் கூட்டணியா அல்லது விஜயின் தவெக உடன் கூட்டணியா என்பதை ஓ பன்னீர்செல்வம் அறிவிப்பார் என்கிறார்கள்.
Comment / Reply From
Popular Posts
Newsletter
Subscribe to our mailing list to get the new updates!