Dark Mode
Breaking News
  • Sunday, 18 October 2026 Sunday,
    18 October 2026
பிளைட் ஏறுவதற்கு முன்பே தவிடு பொடியான பியூஸ் கோயல் கணக்கு.. சொதப்பும் அதிமுக பாஜக கூட்டணி டீல்  | Eye MMedia Tamil

பிளைட் ஏறுவதற்கு முன்பே தவிடு பொடியான பியூஸ் கோயல் கணக்கு.. சொதப்பும் அதிமுக பாஜக கூட்டணி டீல் | Eye MMedia Tamil

Place: சென்னை

Reporter Name: Eye Media Tamil

264 0
PHNjcmlwdCBhc3luYyBzcmM9Imh0dHBzOi8vcGFnZWFkMi5nb29nbGVzeW5kaWNhdGlvbi5jb20vcGFnZWFkL2pzL2Fkc2J5Z29vZ2xlLmpzP2NsaWVudD1jYS1wdWItMzgyNDE2ODE4NzgyMTcxNSIKICAgICBjcm9zc29yaWdpbj0iYW5vbnltb3VzIj48L3NjcmlwdD4=

பிளைட் ஏறுவதற்கு முன்பே தவிடு பொடியான பியூஸ் கோயல் கணக்கு.. சொதப்பும் அதிமுக பாஜக கூட்டணி டீல்

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான அதிமுக-பாஜக கூட்டணி பேச்சுவார்த்தையில், பியூஷ் கோயல் மற்றும் எடப்பாடி பழனிசாமி சந்தித்து தொகுதிப் பங்கீடு குறித்து விவாதித்ததாகவும், இதில் ஓபிஎஸ, ஓபிஎஸ், அமமுக அணிகளுக்கும் தொகுதிகள் குறித்து பேசப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன. இதுகுறித்து ராஜ கம்பீரன் தன்னுடைய கருத்தை கூறுகிறார்.

பிரபல யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள அரசியல் விமர்சகர் ராஜ கம்பீரன், "தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளரும் மத்திய அமைச்சருமான பியூஸ் கோயல், அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்த சென்னை வந்திருந்தார். அப்போது சீட் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது..

17/0 தொகுதிகள் நொறுங்கியது
170 தொகுதிகள் போக மீதமுள்ள இடங்களில் பாஜகவிற்கு 23 தொகுதிகள், பாமகவிற்கு 23 தொகுதிகள், டிடிவி தினகரனுக்கு 6 தொகுதிகள் மற்றும் ஓ.பன்னீர்செல்வத்திற்கு 3 தொகுதிகள் வழங்கப்படலாம் என்று பேச்சுகள் அடிபட்டன.

ஆனால், பியூஸ் கோயல் தன்னுடைய பேச்சுவார்த்தையை முடித்துவிட்டு ஃபிளைட் ஏறுவதற்கு முன்பாகவே, இந்த திட்டங்கள் எதுவும் நடக்காது என்பதற்கான சூழல் உருவாகிவிட்டது. காரணம், ஓபிஎஸ் அணியை சேர்ந்த வைத்திலிங்கம், எடப்பாடி பழனிசாமியின் தலைமையை ஏற்பது தங்களுக்கு இழிவு , எடப்பாடி தலைமைப்பொறுப்பில் இருக்கும்வரை அதிமுக தேறவே தேறாது" என்று பகிரங்கமாக அறிவித்தார்.

தடுமாறும் பாஜக
மற்றொருபக்கம் டிடிவி தினகரன், தனக்கு 6 இடங்கள் ஒதுக்கப்பட்டதாக வந்த செய்தி முற்றிலும் வதந்தி என்றார்.. எடப்பாடி பழனிசாமி தான் தங்களின் முதலும், ஒரே அரசியல் எதிரி என்று கடுமையான எதிர்வினைகள் வந்தன. இதனால் அந்த 170 தொகுதித் திட்டம் ஆரம்பத்திலேயே தோல்வியில் முடிந்துவிட்டது.

திமுக எதிர்ப்பு வாக்குகளை ஒன்றிணைக்க பாஜக முயற்சிக்கிறது.. ஆனால் அது நடைமுறை சாத்தியமாகவில்லை..

பாஜக ஒருபுறம் அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறையை பயன்படுத்தி எடப்பாடி பழனிசாமியை தங்கள் வழிக்குக் கொண்டு வர முயற்சிக்கிறது.. அப்படிச் செய்வதன் மூலம் ஒரு பெரிய 'மேஜிக்' நடந்துவிடும் என அவர்கள் நம்புகிறார்கள்.

சொதப்பல் பாமக கூட்டணி
மற்றொருபுறம், சிபிஐ விசாரணை போன்ற காரணங்களைக் காட்டி அன்புமணி ராமதாஸை சிறையில் அடைக்க சொல்கிறார்.. அப்போதுதான் கட்சிக்கு நல்லதுதான் என்று ராமதாஸ் பேசும் நிலைக்கு சென்றுவிட்டார்..

பாமகவின் உள்கட்சித் தேர்தல் மற்றும் பொதுக்குழு விவகாரங்களில் தேர்தல் ஆணையமே மோசடியாக செயல்படுவதாக குற்றச்சாட்டு இருக்கும்போது, அவர்கள் எப்படி இந்தக் கூட்டணியில் இணைவார்கள் என்ற கேள்வியை முன்வைக்கிறார்?

3 முறை இடைக்கால முதலமைச்சராக இருந்த ஓபிஎஸ்ஸை, நாடாளுமன்ற உறுப்பினராக அரசியல் ரீதியாக வலம் வரும் டிடிவி தினகரனை, ஒரே மேஜையில் உட்கார வைத்து பாஜக பேசினார்களா? ராமதாஸ் போன்றவர்களை அழைத்து பேசினார்களா?

கல்யாண வீடுகளில் "சாப்பாடு மிஞ்சினால் தருகிறேன்" என்று சொல்வது போல, எடப்பாடி பழனிசாமி இவர்களுக்கு இடங்களை ஒதுக்க முன்வருவதை அவர்கள் அவமானமாக கருதுகிறார்கள்.

முக்குலத்தோர் சமுதாய வாக்குகள்,
முக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்த டிடிவி தினகரன், ஓபிஎஸ் ஆகியோர், எடப்பாடி காட்டும் கருணையில் அரசியல் செய்ய விரும்பவில்லை... எடப்பாடியின் தலைமையை அழிப்பதே அவர்களின் முதல் நோக்கமாக இருப்பதால், திமுக எதிர்ப்பு என்ற பெயரில் இவர்கள் இணைவது சாத்தியமில்லை.. .

மற்றொருபுறம், திமுக, முத்தரையர் போன்ற சிறு சமூகங்களையும், முக்குலத்தோர் வாக்கு வங்கியின் பெரும்பகுதியையும் அதாவது சுமார் 80 மிகச் சிறப்பாகத் தங்கள் பக்கம் ஈர்த்துவிட்டது. இதனால் எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்தாலும் அவர்களுக்குப் பெரிய பலன் இருக்காது" என்கிறார் ராஜகம்பீரன்

Comment / Reply From

Newsletter

Subscribe to our mailing list to get the new updates!

Editor Page

spirituality